Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2023 22:17:30 Hours

இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பற்றிய நிகர் நிலை செயலமர்வு

14 வது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி இராணுவ பொறியியல் படையணி மத்தேகொடயில் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி தொடர்பிலான திறன்களை மேம்படுத்துவதற்காக நிகர் நிலை செயலமர்வு ஒன்றை 2023 ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 03 வரை நடாத்தியது.

இதில் ஏழு அதிகாரிகள் மற்றும் 26 சிப்பாய்கள் கலந்து கொண்டனர். இரசாயன ஆயுதங்களுக்கான தேசிய அதிகாரசபை, அணுசக்தி மற்றும் வழு ஒழுங்கமைப்பு பேரவை, சுகாதார அமைச்சு மற்றும் பிற நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பற்றிய விளக்கங்களை அளித்தனர். இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் (நவம்பர் 03), இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பற்றிய பயிற்சியின் முக்கியத்துவத்தை பிரதம களப் பொறியியலாளர், மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் எடுத்துரைத்ததுடன், இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பற்றிய சிந்தனைகளை மேம்படுத்துவதற்கு குழுவில் இருக்கும் வளங்களை அதிகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.