Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2022 21:50:12 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் முன்பள்ளி குழந்தைகளுக்கு புத்தர் சந்நிதி நிர்மாணிப்பு

இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் தெஹியப்பாவ புபுது பாலர் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த சந்நிதி மகா சங்கத்தினரின் சமய சடங்குகளுக்கு மத்தியில் சனிக்கிழமை (26) திறந்து வைக்கப்பட்டது. இயந்திரவியல் காலாட் படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய சந்நிதியை திறந்து வைத்தார்.

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் நிதியுதவியுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளம் பயன்பாட்டில் இக்கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த மத சடங்குகளுக்கு மத்தியில், மகா சங்கத்தினரின் பங்களிப்புடன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் இந்திக்க புஞ்சிஹேவா, படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். பிள்ளைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச சிற்றுண்டிகளை படையினர் வழங்கினர்.