Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2023 14:21:50 Hours

அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழக கருத்தரங்கில் இராணுவ தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழக பாதுகாப்பு மற்றும் ஆளுகை' கருத்தரங்கின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக செப்டம்பர் 14 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார்.

ஐக்கிய இராச்சிய அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழக பிரதிநிதிகளால் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட்டதுடன் இந்நிகழ்வை இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. ஆசிய மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்தின் 10 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, அந்தந்த நாடுகளுடன் தொடர்புடைய முன்னாள் படைவீரர் சங்கத்தின் அதிகாரிகள் இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

பிரதான அமர்வுகள் நிறைவடைந்த பின்னர் இராணுவத் தளபதி, அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழக அதிகாரிகள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுடன் உரையாடினார்.

அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழகம் ஐக்கிய இராச்சியத்திற்காக சேவையாற்றிய பிற நாடுகளை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு நலன்புரி ஆதரவை வழங்குகிறது.

1921 இல் ஏர்ல் ஹெய்க் என்பவரால் நிறுவப்பட்ட அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழகமானது கரீபியன், மேற்கு, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்திய துணைக் கண்டத்தை உள்ளடக்கி 46 நாடுகளில் 52 உறுப்பினர்களை அமைப்பு கொண்டுள்ளது. அரச பொதுநலவாய முன்னாள் சேவைகள் கழகம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சமமான நலன்புரி மானியங்கள் வடிவில் ஆதரவை வழங்குகிறது. சேவையாற்றிய எந்த ஒரு முன்னாள் இராணுவ வீர வீராங்கனைகள் உதவி இல்லாமல் இருக்கக் கூடாது என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.