Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2018 13:54:19 Hours

அமொரிக்க ஐ.நா பெசிபிக் இராணுவ துணை தூதரக குழுவினர் ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகள சம்பந்தமாக கலந்துரையாடல்

அமொரிக்க இராணுவ பசிபிக் தூதரக குழுவினர் இலங்கையின் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களை (14) ஆம் திகதி வியாழக்கிழமை காலை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து எதிர்காலத்தின் ஐ.நா. அமைதிகாக்கும் நியமங்களைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினார்.

இராணுவத்தில மிதிவெடிகள் அகற்றுவது மற்றும் அதன்; பிரதான பரிசோதகர் உட்பட் மற்ற தனியார் துறை மிதிவெடிகள் அகற்றும் பங்குதாரர்களின் விரும்பத்தக்க செயல்களை பாராட்டியதுடன் இலங்கையில் 2020 ஆம் ஆண்டளவில் தனது தேசிய நோக்கத்தை வேகமாக நிறைவேற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட நான்கு பிரதிநிதிகளுடன் மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கையின் துணை தூதரகர் பிரிகேடியர் ஜெனரல் மார்க் டபிள்யு ஜில்லெட் அவர்கள் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடும் போது இலங்கை இராணுவத்திற்கு எதிர்வரும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய அவர்களின் ஆதரவை தெரிவித்தனர்

அதன்படி இலங்கை இராணுவத்தில் எல்லாவிதமான வளங்களையும், தொழில்சார்ந்த செயற்பாட்டிற்கான திறன்களையும், கொண்டிருப்பதால் 'பாதுகாப்பு ஒத்துழைப்பு - எதிர்கால தலையீடு' என்ற தலைப்பில் இராணுவத்தின் பயிற்சிப் பிரதேசங்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக இக் குழுவினர் தெரிவித்துக் கொண்டனர்.

இச் சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதியவர்களால் அமொரிக்க இராணுவ பசிபிக் தூதரக குழுவின் பிரிகேடியர் ஜெனரல் மார்க் டபிள்யு ஜில்லெட் அவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கினார்.

இந்த சந்திப்பிற்காக இராணுவ படைத் தலைமையகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.

Best Sneakers | Nike Air Max