Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2023 22:17:30 Hours

அனுசரணையாளர்களின் ஆதரவுடன் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியினரால் குடும்பத்திற்கு புதிய வீடு

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் தங்களின் மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்கி, 'எவரெஸ்ட்' விளையாட்டுக் கழகம் வழங்கிய அனுசரனையில் காலி வக்வெல்லவைச் சேர்ந்த குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்தது.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காலி வக்வெல்லவில் வசிக்கும் பயனாளிகளான திருமதி கேஎஸ்கே பெரேரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டுச் சாவியை 2023 செப்டம்பர் 11 ம் திகதி வழங்கினார்.

8 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் வீட்டின் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுமானத் திட்டம் 613 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி மற்றும் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரால் நெருக்கமாக மேற்பார்வையிடப்பட்டது.

இந்த குடும்பத்தின் ஆதரவற்ற நிலையை அவதானித்த அனுசரணையாளர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினர் இந்த காரணத்திற்காக உதவிக்காக படையினரை அணுகினர்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், போபே, பொத்தல பிரதேச செயலாளர் மற்றும் 'எவரெஸ்ட்' விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். படையினரின் அர்ப்பணிப்பு பங்கேற்பாளர்கள் மற்றும் அனுசரனையார்களினால் பாராட்டப்பட்டது. இந்த வீடு சில வாரங்களுக்குள் கட்டப்பட்டது.