Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2023 00:02:53 Hours

அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிப்பாய்களின் ஆதரவுடன் சுனாமி எச்சரிக்கை பயிற்சி பட்டறை

61 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 14 வது (தொ) கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி உட்பட 61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த'சுனாமி முன்னெச்சரிக்கை' செயலமர்வை நடத்துவதற்கு தமது உதவிகளை வழங்கினர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம்,மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெள்ளிக்கிழமை (24) மாகல்லாவில் உள்ள அனுலாதேவி பெண்கள் பாடசாலையில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தில் சுமார் 1800 மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

காலியில் அதிக சுனாமி அபாயம் உள்ள கரையோரப் பகுதிகளில் செயன்முறை ரீதியாகவும் பயிற்சி ரீதியாகவும் செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், காலி மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் கிராமசேவை அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வு குமார காஷியப்ப கனிஷ்ட வித்தியாலம், மாதம்பகம மற்றும் மாதம்ப மஹா வித்தியாலயத்தின் 1000 மாணவர்களின் பங்கேற்புடன் 2023 மார்ச் 1-3 திகதிகளில் இராணுவ வீரர்களின் உதவியுடன் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் பயிற்சி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.