Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2018 22:30:33 Hours

அத்திட்டிய மிகிந்து செத் மெதுரயில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய அத்திட்டிய மிகிந்து செத் மெதுரயில் உள்ள ஊனமுற்றோர் நலன்புரி நிலையத்தில்; கடந்த (05)ஆம் திகதி வியாழக்கிழமையன்று புதுவருட நிகழ;வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் சித்திரை புதுவருட கொண்டாடத்தில் ஊனமுற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வயதானவர்களும் கலந்து கொன்டமை சிறந்து விழங்கியது.

இந் நிகழ்வில் பாரம்பரியமான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளும் இடம் பெற்றன.

சம்பிரதாய வழக்கத்தின் படி பால் பானை பொங்கி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான சக்கர நாற்காலி மற்றும் தேசிக்காய் கரண்டி, யானைக்கு கண் வைத்தல், பானை உடைத்தல் போன்றன இடம் பெற்றன.

ஒவ்வொரு நிகழ்விலும் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.

இராணுவத் தளபதியான லெடிப்னென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் மிகிந்து செத் மெதுரயில் வசிக்கும் ஊனமுற்ற யுத்த வீரர்களின் நன்மை கருதி இந்த புத்தாண்டு பண்டிகை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ (04)ஆம் திகதி புதன்கிழமை இந் நலன்புரி நிலையத்தை பார்வையிட வருகை தந்தார்.

இந் நிகழ்ச்சியானது அத்திட்டிய மிகிந்து செத் மெதுரயி நலன்புரி நிலையத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் நந்தன குணவர்தன அவர்களின் தலைமையில் இடம் பெற்றனர்.

Authentic Nike Sneakers | Air Max