Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2019 12:24:20 Hours

அதிகாரிகளுக்கான (மிட் கெரியர் பாடநெறி) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சமிக்ஞைப் படையணித் தளபதியவர்கள்

கண்டி பூவெலிக்கட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞைப் படை பயிற்றுவிப்பு பாடசாலையில் (மிட் கெரியர் பாடநெறி) பாடநெறியை மேற்கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நோக்கில் கடந்த சனிக் கிழமை (12) இப் படைத் தலைமையகத்தின் மேர்குரி கேட்போர் கூடத்திற்கு சமிக்ஞைப் படையணித் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல்; விஜேசிங்க அவர்கள் இப் பயிற்றுவிப்பு பாடசாலையின் தளபதியான கேர்ணல் இமால் அசல்அராச்சி அவர்களால் வரவேற்கப்பட்டு கேட்போர் கூடத்தில் சான்றிதழ்களையும் அதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமிக்ஞைப் படையணித் தளபதியவர்கள் ஒலி மேம்பாட்டு கல்வியில் மற்றும் ஒழுங்கப் பண்பாடு போன்றவற்றை மேம்படுத்தலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும் அவர் இப் பயிற்றுவிப்பு பாடசாலையானது கல்வி அறிவை மேம்படுத்துதல் மட்டுமன்றி நேரான சிந்தனை உடைய படையினரை உருவாக்குதலும் இராணுவத்தின் கடமையென அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த தளபதியவர்கள் அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.

சில நிமிடங்களின் பின்னர் தொடர்பாடல் ஆய்வுகூடத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட சமிக்ஞைப் படைத் தளபதியவர்கள் இந்திய பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றப்படுகின்ற இலங்கை சமிக்ஞைப் படையினரையும் பார்வையிட்டார். அந்த வகையில் இந்திய அரசின் நன்கொடையினால் அமையப்பெற்ற இவ் ஆய்வுகூடமானது இந்திய அதிகாரியான ஜெனரல் பிபின் ராவட் அவர்களின் தலைமையில் இராணுவத் தளபதியவர்களின் பங்களிப்போடு 2018ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாலை வேளைக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் இடம் பெற்றது. Buy Sneakers | adidas Yeezy Boost 350