Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2017 08:00:55 Hours

அத்திடிய மிஹிந்துசெத் மெதுரடவிற்கு இராணுவ தளபதி விஜயம்

பனாகொடை இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற 68 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வின் பின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் நாட்டிற்காக தமது அவயங்களை இழந்து அங்கவீனமுற்று அத்திடிய மற்றும் ராகம ரணவிரு செவனையில் சிகிச்சை பெற்று வரும் படை வீரர்கள் சென்று பார்வையிட்டனர்.

முதலில் அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்துசெத் மெதுரட இராணுவ தளபதி வருகை தந்தார். அவரை மிஹிந்துசெத் மெதுர முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரதீப் குணவரத்ன வரவேற்றார். பின்பு இராணுவ தளபதியினால் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் படை வீரர்களுடன் உரையாடி அவர்களது நலன்புரி விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து அங்குள்ள இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார். பின்பு அங்கு வருகை தரும் பிரமுகர்களுக்கான விஷேட புத்தகத்திலும் இராணுவ தளபதி கையொப்பமிட்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் ரணவிரு ராகம செவனவிற்கு வருகை தந்தார். அவரை ராகம ரணவிரு செவன முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஹேமந்த குலதுங்க அவர்கள் வரவேற்றார். பின்பு அங்குள்ள அங்கவீனமுற்றுள்ள 114 படை வீரர்களது நலன்களை விசாரித்து அவர்களுக்கு அன்பளிப்பு பொதிகளையும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி வழங்கினார்.

Buy Kicks | Shop: Nike