13th January 2026
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவம் பெற்றது. இலங்கை இராணுவத்தால் நடாத்தப்பட்ட இப்போட்டி 2024 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இரண்டு வருட காலப்பகுதியில் 39 விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது.
இந்த பிரமாண்டமான நிறைவு விழா 2026 ஜனவரி 12 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கே.பீ.எ.அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அத்துடன் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில், இலங்கை இராணுவம் 157 தங்கம், 131 வெள்ளி மற்றும் 108 வெண்கலப் பதக்கங்களுடன் 31 சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்று முதலிடத்தைப் பிடித்தது.
இலங்கை விமானப்படை 99 தங்கம், 99 வெள்ளி மற்றும் 108 வெண்கலப் பதக்கங்களை வென்று 30 சாம்பியன்ஷிப் கிண்ணத்தைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பல்வேறு விளையாட்டுத் துறைகளில் பாராட்டத்தக்க செயற்திறனை தொடர்ந்து, இலங்கை கடற்படை 46 தங்கம், 66 வெள்ளி மற்றும் 97 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.