2nd January 2026
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் நிறுவப்பட்ட ‘இலங்கையை மீள் கட்டியெழுப்பும்’ நிதிக்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து அதிகாரிகளும் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அதற்கமைய, முப்படையினரால் வழங்கப்பட்ட மொத்த பங்களிப்பு ரூ. 372,776,918.28 ஆகும். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ரூ. 250 மில்லியன் நன்கொடை அளித்ததுடன் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ரூ. 73,963,879.71 மற்றும் விமானப் படை தளபதி ஏயர் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ ரூ.48,813,038.97 நன்கொடை அளித்தனர்.
அதன் தொடர்புடைய காசோலைகள் நேற்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. சனத் நந்திக குமாரநாயக்க அவர்களிடம் முறையாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
(படங்கள்: Defence.lk)