22nd December 2025
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 வது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 2025 டிசம்பர் 21 அன்று 240 பயிலிளவல் அதிகாரிகளை பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
இப் பாடநெறியில் புதிய அதிகாரிகள் பாடநெறி 93, 94பி, குறுகிய பாடநெறி 21சி, 23சி,பெண் பாடநெறி 20,60 (தொ) மற்றும் பெண் பாடநெறி 19 (தொ) ஆகிய பாடநெறிகளை சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகளும், உகண்டா, ருவாண்டா, மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளும் அடங்குவர்.
முதல் நிகழ்வு சம்பிரதாயத்திற்கு அமைய ஆரம்பமானதுடன், இதன்போது பிரதம அதிதி குதிரைப்படை அணிவகுப்பு மூலம் இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு சதுக்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் படையினர் பிரதம அதிதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கினர். பின்னர் பிரதம அதிதி இலங்கை இராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அணிவகுப்பு கட்டளையாளர் இலங்கை இயந்திரவியற் காலாட் படையணியின் மேஜர் ஏ.பி.சி.பீ. விக்ரமரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அணிவகுப்பைத் தொடங்க முறையான அனுமதியைக் கோரினார்.
பின்னர் பிரதம விருந்தினர் அணிவகுப்பின் முறையான பரிசீலனை நடத்தினார். அதனை தொடர்ந்து பிரத விருந்தினர் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி அவர்களுடன் இணைந்து புதிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் அதிகாரவாணை வாள்களை வழங்கினார்.
சிறப்பு விருதுகள்
ஒவ்வொரு பாடநெறியில் சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
நிரந்தர பயிலிளவல் அதிகாரி பாடநெறி 93
• தகுதி வரிசையில் முதல் இடம் – படையலகு அதிகாரி எஸ்.எம்.ஏ.ஜே. சமரகோன்
• கௌரவ வாள் - படையலகு அதிகாரி எஸ்.எம்.ஏ.ஜே. சமரகோன்
நிரந்தர பயிலிளவல் அதிகாரி பாடநெறி 94 பீ
• தகுதி வரிசையில் முதலாமிடம் - குழு அதிகாரி டபிள்யூ.பீ.எஸ் அகலங்க
• கௌரவ வாள் – குழு அதிகாரி டபிள்யூ.பீ.எஸ் அகலங்க
நிரந்தர பயிலிளவல் அதிகாரி குறுகிய பாடநெறி 23
• தகுதி வரிசையில் முதல் இடம் - குழு அதிகாரி டபிள்யூ.எம்.பி.எம். விக்ரமசிங்க
நிரந்தர பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 20
• தகுதி வரிசையில் முதல் இடம் – பயிலிளவல் கோப்ரல் எம்.ஜீ.பீ.எம். லக்மாலி
தொண்டர் அதிகாரி பாடநெறி 62
• தகுதி வரிசையில் முதல் இடம் – அதிகாரி பயிலிளவல் ஆர்.டி.ஐ.பீ. ஜயலத்
தொண்டர் பெண் அதிகாரி பாடநெறி 19
• தகுதி வரிசையில் முதல் இடம் –பயிலிளவல் சாஜன் ஆர்.எம்.எம்.பீ. பண்டார
சகல துறைகளிலும் சிறந்த - வெளிநாட்டு அதிகாரிக்கான கௌரவ கோது
• பயிலிளவல் சாஜன் கோப்ரல் எஸ். கயோம்போ (சாம்பியா குடியரசு)
தனது உரையில், பிரதம அதிதி பட்டதாரிகளுக்கு தேசத்திற்கான அவர்களின் கடமைகளை நினைவூட்டி அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார், அதே நேரத்தில் அண்மையில் இடம்பெற்ற தித்வா சூறாவளியின் போது இலங்கை இராணுவத்தின் பங்களிப்புகளைப் பாராட்டினார். உலகளாவிய இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக திறமையான மற்றும் ஒழுக்கமான அதிகாரிகளை வளர்ப்பதில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து புதிதாக அதிகாரவாணை பெற்ற அதிகாரிகள் புகழ்பெற்ற 'மகர தோரணத்தின்' படிகள் ஊடாக இராணுவ கல்வியற் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியுடன் மரியாதை செலுத்தியவாறு அணிவகுத்து சென்றனர்.
பின்னர் பிரதம விருந்தினர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கையொப்பமிட்டு பாராட்டுரைகளை வழங்கினார். சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் பிரதம விருந்தினருக்கு இராணுவத் தளபதி ஒரு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார். அதே நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் அதிகாரி பயிலிளவல் உணவகத்தில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று, நிகழ்வின் நினைவாக குழு படம் எடுத்துகொண்டார்.
தொடந்து, பயிற்சி அணிவகுப்பு சம்பிரதாயங்களின் நிறைவை குறிக்கும் வகையில், பயிலிளவல் அதிகாரிகள் உணவகத்தில் பாராம்பரிய அதிகாரவாணை பெற்ற அதிகாரிகளின் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிரதம அதிதியாகக் கௌரவ அதிதிகளுடன் கலந்துகொண்டதுடன், புதிய நிலை பெற்ற அதிகாரிகளும் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாத்திரங்களுக்கு மாறியதைக் கொண்டாடினர்.
தொடந்து, பயிற்சி அணிவகுப்பு சம்பிரதாயங்களின் நிறைவை குறிக்கும் வகையில், பயிலிளவல் அதிகாரிகள் உணவகத்தில் பாராம்பரிய அதிகாரவாணை பெற்ற அதிகாரிகளின் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிரதம அதிதியாகக் கௌரவ அதிதிகளுடன் கலந்துகொண்டதுடன், புதிய நிலை பெற்ற அதிகாரிகளும் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாத்திரங்களுக்கு மாறியதைக் கொண்டாடினர்.
மதகுருமார்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரித் தளபதிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகளின் பாரியார்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.