“விரு சிசு பிரதீப” கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி கலந்து சிறப்பிப்பு

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய போர்வீரர்களின் பிள்ளைகளை அங்கீகரிக்கும் வகையில், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், 2026 ஏப்ரல் 29 அன்று இராணுவத் தலைமையகத்தில் “விரு சிசு பிரதீப” புலமைப்பரிசில் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதிகள் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டனர். பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் நிமித்தம் மௌன அஞ்சலியும், பாரம்பரிய வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. பின்னர், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பின்னர், இராணுவ தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியருடன் இணைந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். தொடர்ந்து இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத், மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி விந்தியா பிரேமரத்ன, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும், கலந்துகொண்டனர். கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக மொத்தம் 66 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அதே நேரத்தில் 58 மாணவர்கள் விழாவின் போது அடையாளப்பூர்வமாக தங்கள் புலமைபரிசில்களை பெற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 25,000.00 சேமிப்பு வைக்கப்பட்ட வங்கிப் புத்தகம், புத்தகங்கள், பாடசாலை பைகள் மற்றும் உண்டியல்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களில் ஒருவர் நன்றியுரை வழங்கியதைத் தொடர்ந்து, சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.