பாகிஸ்தானில் நடைபெறும் 'ஷேக் ஹேண்ட் – II' கள பயிற்சிக்காக இலங்கை இராணுவ குழுவினர் புறப்படல்

'ஷேக் ஹேண்ட்' பயிற்சியின் இரண்டாம் பதிப்பு, பாகிஸ்தான் தர்பேலாவில் உள்ள விசேட நடவடிக்கைகள் பாடசாலையில் 2026 ஏப்ரல் 26 முதல் 10 மே 2026 வரை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, 8 அதிகாரிகள் மற்றும் 37 இதர வீரர்களைக் கொண்ட இலங்கைப் படைப்பிரிவு ஒன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2026 ஏப்ரல் 23 அன்று புறப்பட்டது. இந்த குழுவிற்கு கெமுனு ஹேவா படையணியின் லெப்டினன் கேணல் டீ.எம்.டி. தென்னக்கேன் ஆர்எஸ்பீ எல்எஸ்சீ அவர்கள் தலைமை தாங்குகிறார். செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துதல், தந்திரோபாயத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு கிளர்ச்சி எதிர்ப்புச் சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பாகிஸ்தான் இராணுவத்துடன் தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகளில் இந்தக் குழு ஈடுபடவுள்ளது.

141 வது காலாட் பிரிகேட் தளபதியான பிரிகேடியர் எச்.பீ.டி.எஸ். குணவர்தன ஆர்எஸ்பீ அவர்கள் விமான நிலையத்தில் புறப்பட்டு செல்லும் படையினருக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.