மிஹிந்து செத்மெதுர நலவிடுதி புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி கலந்து சிறபிப்பு

அத்திட்டிய மிஹிந்து செத் மெதுர நலவிடுதியின் போர்வீரர்கள், 28 ஏப்ரல் 2026 அன்று தங்களது புத்தாண்டு விழாவை கோலாகலமாகவும், விழாக்கோலத்துடன் கொண்டாடினர்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வருகை தந்த இராணுவத் தளபதியை மிஹிந்து செத்மெதுர நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் பீ.டி.என்.ஐ அல்மெய்த ஆர்எஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். மங்கல விளக்கேற்றுதலுடன் நிகழ்வின் முறையான நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, போர்வீரர்கள் பல்வேறு பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் புத்தாண்டு நடன நிகழ்வுகள், புகழ்பெற்ற பாடகி சுஜாதா அத்தநாயக்கவின் இசை நிகழ்ச்சி மற்றும் நுகேகொட, SAEGIS பல்கலைக்கழகத்தின் லியோ கழக மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு பொழுதுபோக்கு புத்தாண்டு நாடகம் ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு மேலும் வண்ணத்தையும் உற்சாகத்தையும் சேர்த்தன. இந்த நிகழ்வில் கலாசார, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை சம்பிரதாய நிகழ்வுகள் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தனர்.

நிகழ்வின் நிறைவில், இராணுவத் தளபதியும் சிறப்பு அழைப்பாளர்களும், நிகழ்வில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் கிண்ணங்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.