8th February 2026
78 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்த தேவையை ஆதரிப்பதற்காக 521 வது காலாட் பிரிகேட் 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கமைய, 52 வது காலாட் படைப்பிரிவின் அறிவுறுத்தலில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம், 521 வது காலாட் பிரிகேட் தலைமையக தளபதியின் மேற்பார்வை மற்றும் பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது. 52 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள காலாட் பிரிகேட்கள் மற்றும் படையணிகளைச் சேர்ந்த 113 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள், 13 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை நடைமுறைகள் மற்றும் பொது இரத்தமாற்றத் தேவைகளை எளிதாக்குவதற்கு இரத்தத்தின் அவசரத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக தாமாக முன்வந்து பங்களித்தனர்.