மடுவில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

மடு மற்றும் தேக்கத்தில் தீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 53 குடும்பங்களுக்கு உதவி வழங்கும் வகையில் உலர் உணவு மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 2026 ஜனவரி 28 அன்று தேக்கம் கிராம சேவகர் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நலன்புரி முயற்சிக்கு கனடாவில் வசிக்கும் ஒரு நன்கொடையாளர் ஆதரவளித்துடன் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.