இராணுவத்தினரால் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் கல்லூரிக்கு இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிப்பு

யாழ்ப்பாணம், அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் கல்லூரியின் மாணவர்களுக்காக 51 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 5 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் 2026 ஜனவரி 30 ஆம் திகதி இரண்டு மாடி கட்டிடத்தை நிர்மாணித்து ஒப்படைத்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்திற்கு, அமெரிக்காவின் ரோயல் கல்லூரி பழைய மாணவர்களுக்கான கிழக்கு கடற்கரை அறக்கட்டளையின் திரு. சேனக செனவிரத்ன அவர்களின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் வசிக்கும் கொடையாளரான வைத்தியர் கீதேந்திர ராஜையா அவர்களினால் ரூபாய் 25 மில்லியன் நிதியுதவி கிடைத்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.