28th June 2025
2025 ஜூன் 30 முதல் ஜூலை 06 வரை கல்னேவ வித்யாதர விகாரையில் நடைபெறவிருக்கும் இலங்கை ராமண்ணா மகா நிகாயவின் 74 வது உபசம்பத்தா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ 2025 ஜூன் 24 அன்று கள விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவம் வாலுக்காரம விகாரை, விஜிதபுர ஸ்ரீ புண்யவர்தனாராம கோயில் மற்றும் வித்யாதர பிரிவேனா உள்ளிட்ட முக்கிய மதத் தலங்களை புதுப்பித்து வருகிறது. பரபோலிக் குடில்கள், வழங்கல் ஆதரவு, சமையலறை உபகரணங்கள், தங்குமிட வசதிகள் மற்றும் பிக்குகள் மற்றும் பக்தர்களுக்கான உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
விஜயத்தின் போது, கல்னேவ மகாவலி மைதானம் போன்ற முக்கிய இடங்களில் கட்டுமான முன்னேற்றத்தை தளபதி ஆய்வு செய்ததுடன் மேலும் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்கான உத்தரவுகளை வழங்கினார். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.