பயிற்சி

Clear

141 வது காலாட் பிரிகேடினால் தொழிற்பயிற்சி பற்றிய விரிவுரை

2024-11-08

141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தொழிற்பயிற்சி மற்றும் மதிப்பீட்டை மையமாகக் கொண்ட விரிவுரை பிரிகேடின் பயிற்சி தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 06 நவம்பர் 2024 அன்று வெயாங்கொடை 141 வது காலாட் பிரிகேட் கேட்போர் கூடத்தில் தொழிற்கல்வி பயிற்சியுடன் இணைந்ததாக நடாத்தப்பட்டது.


மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ‘தலைமைத்துவத்தில் உளவியல் அணுகுமுறை’ விரிவுரை

2024-11-08

பயிற்சி நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, "தலைமைத்துவத்திற்கான உளவியல் அணுகுமுறை" என்பதை மையமாகக் கொண்ட விரிவுரை மற்றும் நடைமுறை அமர்வு 6 நவம்பர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.


குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை

2024-11-06

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை 05 நவம்பர் 2024 அன்று நடாத்தப்பட்டது. இவ்விரிவுரையை தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலையின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி மேஜர் ஜேஏவீடபிள்யூ ஜயதுங்க அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து நடத்தினார்.


இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள் பயிற்சி நாள் 2024-II நிறைவு

2024-10-31

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள் பயிற்சி தினமான 2024-II படைணி தலைமையத்தில் 2024 ஒக்டோபர் 24 அன்று நடைபெற்றது.


இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தில் இந்திய நடனப் பட்டறை

2024-10-28

இந்திய நடனக் கலைஞரான திருமதி மௌமிதா பால் அவர்களினால் 25 ஒக்டோபர் 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தில் இந்திய நடனப் பட்டறை நடாத்தப்பட்டது. இந்த அமர்வில் பணிப்பகத்தின் நான்கு அதிகாரிகள் மற்றும் தொண்ணூறு சிப்பாய்கள் பங்கேற்றனர்.


21 வது காலாட் படைப்பிரிவினால் இதய நுரையீரல் புத்துயிர்ப்பு பற்றிய விரிவுரை ஏற்பாடு

2024-10-27

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இதய நுரையீரல் புத்துயிர்ப்பு பற்றிய விரிவுரை 23 ஒக்டோபர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அனர்த்த முகாமைத்துவ உயர் பாடநெறி இல-12 நிறைவு

2024-10-19

அனர்த்த முகாமைத்துவ உயர் பாடநெறி இல-12 கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தில் 30 செப்டம்பர் முதல் 16 ஒக்டோபர் 2024 வரை நடைப்பெற்றது.


52 வது காலாட் படைப்பிரிவின் பயிற்சி நாள் நிகழ்வு

2024-09-20

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 செப்டம்பர் 18 அன்று 52 வது காலாட் படைப்பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விரிவுரை நடத்தப்பட்டது.


மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பயிற்சி நாள் விரிவுரை

2024-09-09

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி நாள் நிகழ்ச்சி 4வது இலங்கை பீரங்கி படையணி விரிவுரை மண்டபத்தில் 5 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்றது. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக சட்டப் பிரிவின் பணி நிலை அதிகாரி I லெப்டினன் கேணல் ஏஎம்டிஏபி அறம்பத் அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ வீரர்களின் பொறுப்புகள் தொடர்பான விரிவுரையை நடத்தினார்.


541 வது காலாட் பிரிகேட் படையினருக்கு இணைய பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி

2024-09-04

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 541 வது காலாட் பிரிகேட் படையினருக்கு இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.