இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள் பயிற்சி நாள் 2024-II நிறைவு
31st October 2024
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள் பயிற்சி தினமான 2024-II படைணி தலைமையத்தில் 2024 ஒக்டோபர் 24 அன்று நடைபெற்றது.
2 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நடாத்தப்பட்ட ‘இலங்கையில் தற்கால செயல்பாட்டு சூழ்நிலையில் ‘இயந்திரவியல் காலாட் படையணியின் பயன்பாடு’ பற்றிய விளக்கக்காட்சி அன்றைய பிரதான விடயமாக காணப்பட்டது. விளக்கக்காட்சியின் முடிவில், படையணியின் படைத் தளபதி பஙகேட்பாளர்களுக்கு, அவர்களின் பங்களிப்பை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மாலை 'டைனர்ஸ் கிளப்' நிகழ்வின் போது, புகழ்பெற்ற விரிவுரையாளரும் ஆலோசகருமான திருமதி அமா திஸாநாயக்க அவர்கள் 'நேர்மறையான சிந்தனை மற்றும் மன அழுத்த முகாமைத்துவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பயிற்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.