141 வது காலாட் பிரிகேடினால் தொழிற்பயிற்சி பற்றிய விரிவுரை
8th November 2024
141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தொழிற்பயிற்சி மற்றும் மதிப்பீட்டை மையமாகக் கொண்ட விரிவுரை பிரிகேடின் பயிற்சி தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 06 நவம்பர் 2024 அன்று வெயாங்கொடை 141 வது காலாட் பிரிகேட் கேட்போர் கூடத்தில் தொழிற்கல்வி பயிற்சியுடன் இணைந்ததாக நடாத்தப்பட்டது.
இந்த விரிவுரை இராணுவ வீரர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 8 அதிகாரிகள் மற்றும் 73 சிப்பாய்கள் பங்குபற்றிய இந்த விரிவுரையை வெயாங்கொடை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் நடாத்தினார்.