இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தில் இந்திய நடனப் பட்டறை
28th October 2024
இந்திய நடனக் கலைஞரான திருமதி மௌமிதா பால் அவர்களினால் 25 ஒக்டோபர் 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தில் இந்திய நடனப் பட்டறை நடாத்தப்பட்டது. இந்த அமர்வில் பணிப்பகத்தின் நான்கு அதிகாரிகள் மற்றும் தொண்ணூறு சிப்பாய்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவாக, திருமதி மௌமிதா பால் அவர்கள் இந்நிகழ்விற்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.டி.எம்.எல் சமர திவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.