மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பயிற்சி நாள் விரிவுரை
9th September 2024
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி நாள் நிகழ்ச்சி 4வது இலங்கை பீரங்கி படையணி விரிவுரை மண்டபத்தில் 5 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்றது. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக சட்டப் பிரிவின் பணி நிலை அதிகாரி I லெப்டினன் கேணல் ஏஎம்டிஏபி அறம்பத் அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ வீரர்களின் பொறுப்புகள் தொடர்பான விரிவுரையை நடத்தினார்.
இந்த விரிவுரையில் பனாகொட இராணுவ முகாம் வளாகத்தில் நிலைகொண்டுள்ள படையணிகள் மற்றும் படையலகுகளின் 13 அதிகாரிகள் மற்றும் 136 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.