விசேட படையணி சேவை வனிதையரால் செயற்கை கால்கள் மற்றும் மூக்குகண்ணாடிகள் தானம்

26th November 2024

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் ஆலோசனையில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கொழும்பு நட்புறவு சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு சுபெம் டி சில்வா அவர்களின் ஒத்துழைப்பில், 2024 நவம்பர் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மடவளை உள்பத்த, சந்திர பிம்பராமய விகாரை வளாகத்தில் யட்டவத்தை, பொதுமக்களுக்கான செயற்கை உறுப்புகள், மற்றும் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 256 பார்வை குறைப்பாடுள்ள நோயாளர்கள் பயனடைந்தனர் மற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக 220 வாசிப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும், 45 நோயாளர்கள் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 21 மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையை ஆராய்ந்து அவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினரால் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.