விசேட படையணி சேவை வனிதையரால் படையினர் மற்றும் அவர்களது துணைவியருக்கு மருத்துவ பரிசோதனை
4th November 2024
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் நாவுல பொது மருத்துவமனையுடன் இணைந்து, விசேட படையணி முகாம் வளாகத்தில் 2024 நவம்பர் 01 அன்று படையினர் மற்றும் அவர்களது துணைவியார்களுக்கு மருத்துவ பரிசோதனையை நடாத்தினர்.
இம்முயற்சியானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த திட்டம் விசேட படையணியின் பணியாளர்கள், வைத்தியர் பந்துல விஜேசூரிய மற்றும் நாலந்த மருத்துவமனை குழுவினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 100 தனிநபர்கள் அத்தியாவசிய சுகாதார மதிப்பீடுகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் பயனடைந்தனர்.