புனித லூசியா பேராலயத்தில் இராணுவ நத்தார் கரோல் கீதங்கள் - 2024

18th December 2024

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பாராட்டுக்களை பகிர்ந்து கொள்வதற்கும் அக்கறை செலுத்துவதற்கும் இலங்கை இராணுவம் தனது வருடாந்த பங்களிப்பைச் வழங்கியுள்ளது. புனித நிகழ்வைக் குறிக்கும் வகையில், இராணுவம் 17 டிசம்பர் 2024 அன்று கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் சேவையை நடத்தியது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் மனைவிமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று முக்கிய மொழிகளிலும் நடத்தப்பட்டது. சமாதானத்தின் இளவரசர் இயேசு கிறிஸ்துவுக்காக குழு பாடல்கள் பாடப்பட்டதுடன் உலக அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்யும் போது அவரது பிறப்பை எடுத்து காட்டுகின்றது.

இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பீகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளரின் ஆரம்ப ஜெபத்துடன் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின. கொழும்பு பேராயர் கலாநிதி திரு. மெல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் நத்தார் பண்டிகை செய்தியை வாசித்தார். அதைத் தொடர்ந்து கரோல் கீதத்துடன் பண்டிகை அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி, முன்னாள் இராணுவத் தளபதிகள், இராணுவத்தின் முன்னாள் தலைவர்கள், பிரதான பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், ரணவிரு செவன மற்றும் அபிமன்சல நலவிடுதிகளின் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.