2021-05-12 23:25:20
கொவிட்-19 தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொழும்பில் தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கும் முகமாக, பிட கோட்டை சுகதார வைத்திய அலுவலகத்தில் உள்ள இராணுவ சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கும் தடுப்பூசி மையத்திற்கு இன்று காலை (12) தனது விஜயத்தை மேற்கொண்டார்.
2021-05-08 19:54:38
சீதுவையில் அமைக்கப்படும் மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பார்வையிடும் முகமாக, கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று காலை 8 ஆம் திகதி அங்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
2021-05-06 22:14:20
கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதனை நோக்கமாக கொண்டு சீதுவவில் முதன்முதலில் அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையை திறப்பதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது.
2021-05-04 20:30:37
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொவிட்-19 பணிக்குழு உறுப்பினர்களின் மேலும் ஒரு மீளாய்வு அமர்வு, நொப்கோ தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில், வைத்திய நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான டொக்டர் அசெல குணவர்தன அவர்களின் பங்குற்றுதலில் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று மதியம் (4) இடம்பெற்றது.
2021-04-29 22:00:14
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இன்று காலை 29 ஆம் திகதி ஒரு விசேட சமூக ஊடக தலைமை கூட்டம் இடம்பெற்றது.
2021-04-27 22:38:49
கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்ததை அடுத்து, கொவிட்-19 பரவுவதற்கு எதிராக போராடும் அனைத்து பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் மற்றுமொரு ஆய்வு கலந்துரையாடல் இன்று (27) கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தலைவரும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில்...
2021-04-23 08:02:39
இராணுவத்தில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் போற்றப்படும் படைகளில் ஒன்றான இலங்கை பீரங்கி படை தனது 133 வது ஆண்டு நிறைவை விழா நிகழ்வு பனகொடா படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) நினைவுகூறலுடன் நடத்தப்பட்டது.
2021-04-14 00:37:29
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் வளமான, ஆரோக்கியமான மற்றும் அமைதியான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் தாயகத்திலிருந்து கொவிட் -19 வைரஸை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம் எனவும் தெரிவித்தார்!
2021-04-11 07:25:02
பல வருடங்களாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்த பாழடைந்த நிலையில் காணப்பட்ட குராகல குகை விகாரை என அழைக்கப்படும் பலாங்கொடை ரஜமஹா விகாரை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களின் பங்களிப்புடன் நல்லிணக்கத்தின் அடையாளமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
2021-04-08 15:19:36
ஐக்கிய நாடுகள் ஒன்றிணைந்த அமைதிகாக்கும் பணிகளுகாக புறப்பட்டுச் செல்லவிருக்கும் 223 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவத்தின் போர் குழு இன்று (8) குக்குலேகங்கா அமைதி காக்கும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர்.