Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2021 15:19:36 Hours

மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படவிருக்கும் மூன்றாம் குழுவினர் தளபதிக்கு மரியாதை

ஐக்கிய நாடுகள் ஒன்றிணைந்த அமைதிகாக்கும் பணிகளுகாக புறப்பட்டுச் செல்லவிருக்கும் 223 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவத்தின் போர் குழு இன்று (8) குக்குலேகங்கா அமைதி காக்கும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர்.

இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை போர் குழுவின் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்கிய குழு ஏப்ரல் 20 ஆம் திகதி (1 வது குழு) மேற்கு ஆபிரிக்க நாடான மாலி இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. அதே வேளை ஏற்கனவே மாலியில் பணியாற்றும் இலங்கை போர் குழு உறுப்பினர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

குக்குலேகங்கவில் வியாழக்கிழமை இடம்பெற்ற மேற்படி குழுவின் விடுகை அணிவகுப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சி கல்லூரி வளாக பிரதான நுழைவாயிலில் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதன் பின்னர் அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ பெர்னாண்டோ வரவேற்றார்.

அதனையடுத்து கஜபா காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஸ் உடுகம அவர்களால் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள வருமாறு இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுத்தார்.

அதனையடுத்து அணிவகுப்பின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஷ் புலத்சிங்களவின் அழைப்பின் பேரில் அணிவகுப்பை மறு பரிசீலனை செய்த பின்னர் இராணுவ தளபதிக்கு மாலியின் அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்பட்டுச் செல்லவிருக்கும் 20 அதிகாரிகளும் 223 சிப்பாய்களும் அணிவகுப்பு மரியாதையினை தளபதிக்கு செலுத்தினர். மேற்படி மூன்றாம் போர் குழுவானது அதன் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் எல் உடகெதர அவர்களின் கட்டளையின் கீழ் செயற்படுவர்.

அதனையடுத்து தங்கள் நினைவுகளுக்காக 12 படையணிகளை உள்ளடக்கிய போர் குழு பின்னர் பிரதம அதிதியுடன் படம் எடுத்துக் கொண்டனர்.. இதன்போது குக்குலேகங்க இராணுவ அமைப்புக்களின் முதன்மை பதவி நிலை அதிகாரிகளும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

போர் குழு இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை உள்ளடக்கியுள்ளதுடன் அதிகபட்சமாக கஜபா படையினரை கொண்டுள்ளது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படை, இலங்கை கவச வாகனப் படை, இலங்கை பொறியியல் படை, இலங்கை சமிக்ஞை படை, இலங்கை பொறியியல் சேவைப் படை, இயந்திரவியல் காலாட் படை, இலங்கை போர்க் கருவிகள் படை, இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படை, இலங்கை இராணுவ பொலிஸ் படை, இலங்கை இராணுவ மருத்துவ படை, இலங்கை இராணுவ பொதுச் சேவை படை என்பவற்றினை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் அடங்கியுள்ளனர்.

212 பேர் அடங்கிய அமைதி காக்கும் பணிக்கான முதல் குழு ஏப்ரல் 20 ஆம் திகதி புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், மீதமுள்ள படையினரும் விரைவில் புறப்படுவார்கள் என்பதுடன் ஏற்கனவே மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக சென்றிருக்கும் போர் குழு உறுப்பினர்கள் 240 பேர் கட்டம் கட்டமாக நாடு திரும்புவர்.

3 வது போர் குழுவானது தனது பயிற்சியினை 2020 ஜூன் மாதம் குகுலேகங்கா அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சி கல்லூரியில் ஆரம்பித்து மதுருயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைமுறை குறிப்பார்த்துச் சுடல், பயிற்சிகள் மற்றும் அணிநடை என்பவற்றை பயின்றதன் பின்னர் ஹர்மட்டன் கள பயிற்சி அப்பியாசத்தில் இணைந்துக் கொண்டனர். Running sneakers | Jordan Release Dates , Iicf