Header

Sri Lanka Army

Defender of the Nation

27th April 2021 22:38:49 Hours

கொவிட் செயற்குழு தற்போதைய கொவிட் 19 முன்னேற்றங்கள் மற்றும் அவசர ஏற்பாடுகள் குறித்து மதிப்பீடு

கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்ததை அடுத்து, கொவிட்-19 பரவுவதற்கு எதிராக போராடும் அனைத்து பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் மற்றுமொரு ஆய்வு கலந்துரையாடல் இன்று (27) கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தலைவரும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நிபுணர் அசேல குணவர்தன பங்குபற்றலில், நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, ஜெனரல் சவேந்திர சில்வா 3 வது கட்ட புதிய கொவிட் -19 வைரஸின் தொற்றுநோய் மற்றும் நடத்தையின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். நாட்டின் புதிய தனிமைப்படுத்தல் பகுதிகள் குறித்தும் அவர் விளக்கிய அவர் இது போன்ற தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தினார்.

தற்போது நடைப்பெறும் லண்டன் ஏ.எல் பரீட்சையுடன் தொடர்புடைய பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்துவதற்கான உத்திகளை செயல்படுத்துவது குறித்து பங்கேற்பாளர்களை தெளிவுப்படுத்தினார்.

இன்றைய சூழலில் மனித நடத்தை மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார், இது இறுதியில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

அத்தோடு நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீரென ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக வைத்தியசாலைகளின் தயார்நிலை மற்றும் அவசர தேவைகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கல் குறித்தும் தெளிவுப்படுத்தினார். .

இதற்கிடையில், மற்ற பங்குதாரர்கள் தனிமைப்படுத்தல், சுகாதாரத் துறையின் தயார்நிலை, அத்தியாவசிய சேவைகளின் தயார்நிலை, ஒக்ஸிஜன், சுகாதார ஊழியர்கள், வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்கள், தனிமைப்படுத்தல் மையங்கள், தடுப்பூசி செயல்முறை, தடுப்பூசி இரண்டாம் கட்டம் உள்ளிட்ட பொதுவான விஷயங்களையும் விவாதித்தனர்.

அதேபோல், கொழும்பு நகரசபையின் ஆணையாளர் 5000 ரூபாயின் நிதி நிவாரணத்தை பயனாளிகளிடையே விநியோகிக்க இராணுவத்தின் உதவியைக் கோரினார். குறிப்பிட்ட தேவைக்கு இராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்றுஇராணுவத் தளபதி உறுதியளித்தார்.