Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2021 19:54:38 Hours

இராணுவத்தினால் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதி கட்டத்தை பார்வையிட்ட நொப்கோ தலைவர்

சீதுவையில் அமைக்கப்படும் மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பார்வையிடும் முகமாக, கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று காலை 8 ஆம் திகதி அங்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.

இராணுவ சேவா வணிதா பிரினால் சீதுவையில் முன்னெடுக்கப்படும் குறித்த வைத்தியசாலையானது அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட 1200 படுக்கைகளை கொண்டதுமான மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையாகும். இதற்கான அனுசரனையானது பிராண்டிக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு ஆஷ்ராஃப் அவர்களால் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் படுக்கை வசதிகளை மேம்படுத்தும் முகமாக, இராணுவத்தினால் ஒரு வாரத்திற்குள் நாட்டில் மேம்படுத்தப்பட்ட மிகப்பெரிய கொவிட்-19 வைத்தியசாலையாகும்.

என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.

"இந்த அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இராணுவம் உடனடியாக பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களை நாடு முழுவதும் தேடத் தொடங்கியது, இதன் விளைவாக, அரச வைத்தியசாலைகளில் தற்போதுள்ள திறன்கள் ஏற்கனவே அதிகமாக இருப்பதால் அனைத்து பிராந்திய மட்டங்களிலும் உள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இடைநிலை பராமரிப்பு மையங்கள் அல்லது வைத்தியசாலைகளாக பணியாற்றுவதற்காக புதிய இடங்களை மேம்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் சீதுவையில் இந்த அதிநவீன வசதி மையத்தை விரைவில் திறக்க எதிர்பார்க்கிறோம்," ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

14 வது படைப்பிரிவின் ப டத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா அவர்கள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜதுங்கா ஆகியோருடன் இணைந்து பிராண்டிக்ஸ் குழுமத்தால் வழங்கப்பட்ட குறித்த கட்டிட நுழைவாயிலில் வைத்து இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றார்.

அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தும் பிரிவுகள், புத்துயிர் பெறும் பிரிவுஅவசர சிகிச்சை பிரிவு , மருத்துவ கடைகள் போன்றவற்றைக் கொண்ட அதிநவீன வசதி கொண்ட ஒரு வாரத்திற்குள் இராணுவம் மேற்கொண்ட முயற்சியில் நாட்டில் 3 வது கொவிட்-19 அலை மீண்டும் எழுந்ததை அடுத்து எந்தவொரு தற்செயலையும் எதிர்கொள்ள அமைக்கப்பட்ட இலங்கையின் முதல் வைத்தியசாலையாகும்.

சீதுவை தொழிற்சாலை வளாகமானது பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்காக வழங்கப்பட்ட மூன்றாவது இடமாகும். இதற்கு முன்னதாக அவர்களின் பூனானி மற்றும் ரம்புக்கனை தொழிற்சாலைகளை இந்த உன்னத காரியத்திற்காக வழங்கி்யுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனமானது சர்வதேச அங்கிகாரம் பெற்ற லீ்ட் பிலன்டியம் சான்றிதழ் பெற்ற ஆடை உற்பத்தி நிறுவனமாகும்.

குறித்த மேம்படுத்தப்பட்ட புதிய கொவிட்-19 வைத்தியசாலையானது அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட 1200 படுக்கைகளை கொண்ட வைத்தியசாலையாகும். நாங்கள் முதன்மையாக 5000 படுக்கைகளை தயார் செய்வோம், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதை நாடு முழுவதும் 10,000 படுக்கைகளாக உயர்த்துவதே எமது இலக்கு. இந்த இடத்தில், அவசர அடிப்படையில் தனி அறைகள் மற்றும் இடங்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டு 1200 நோயாளிகளை சமாளிக்க முடியும் .இராணுவம் ஏற்கனவே வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பரமரிப்பு நிலையங்களுக்கு படுக்கைளை வழங்கியுள்ளதோடு அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளையும் வழங்கியுள்ளது.மேலும் நட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள 86,000 படுக்கை கட்டில்களில், ஆரம்பத்தில் கொவிட்-19 நோயாளிகளின் திறன் குறைவாக உள்ளமையினால் நாங்கள் சுமார் 5000 படுக்கை கட்டில்களை மட்டுமே பயன்படுத்தினோம் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன், தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோன், சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் லலித் ஹெரத், ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சானக, பிரதாபசிங்க,இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவைகள் பணிப்பாளர் கேணல் சவீன் சமகே, அதிகாரி இராணுவ தலைமையக பட்டாலியன் கட்டளை அதிகாரி கேணல் இந்திக பெரேரா மற்றும் இன்னும் சில மூத்த அதிகாரிகள் குறித்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.