பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் இலங்கை இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சியங்களுக்கு இரண்டு நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
பட விவரணம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சரை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு
2025-10-10


தேசிய மாணவ சிப்பாய் படையணி, கல்வி அமைச்சுடன் இணைந்து, அகில இலங்கை மாணவ சிப்பாய் கீழைதேய பேண்ட் வாத்திய சவால் கிண்ணம் – 2025 ஐ 2025 செப்டம்பர் 25 அன்று ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி மையத்தில் நடத்தியது.

இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் என்எம் சீஎன்எஸ், இந்திய கடற்படைத் தலைவர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சீஎன்எஸ் இன் எஸ்ஒ கெப்டன் அஸ்வானி கே ஹான்ஸ், சீஎன்எஸ் இன் என்எ கெப்டன் ஆதித் பத்நாயக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் மற்றும் கொமாண்டர் நிதின் பாபு (சீடிஆர் –எப்சீ) ஆகியோர் அடங்கிய குழுவுடன், 2025 செப்டெம்பர் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் தளபதி...

புதிய பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இராணுவ வழங்கல் பாடசாலை, "எதிர்கால வழங்கல் நிலையமாக திருகோணமலையின் சாத்தியக்கூறுகள்: ஆற்றல், தகவமைப்பு, நிலைத்தன்மை, உகந்த பயன்பாடு மற்றும் பிரச்சினைகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 10 அன்று இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த வழங்கல் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

27 வது வருடாந்த இந்து-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடு - 2025, தாய்லாந்தில் 2025 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்கள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து சீருடை அணிந்த பாதுகாப்புத் தலைமை பிரதிநிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

குருநாகல், பாங்கொல்ல அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரம் அபிமன்சல-1 ஆகிய மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.

ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா அவர்களின் 11வது நினைவு பேருரை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டகற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2025 ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்றது.