புனித மரியாள் தேவாலயத்தின் புனரமைப்புக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணி உதவி

நத்தார் தின கொண்டாட்டத்துடன் இணைந்து அவிசாவளை புனித மரியாள் தேவாலயத்தின் அருட் தந்தை டிரான் பெரேராவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் வர்ணம் பூசுதல், நீர் தொட்டியை சரிசெய்தல் மற்றும் குழாய்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு உதவினர். புனரமைப்பு பணிகள் 2025 நவம்பர் 27 முதல் 2025 டிசம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்டன.

புனரமைக்கப்பட்ட கட்டிடம் 2025 டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தேவாலய அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கத்தோலிக்க சமூகத்தின் சார்பாக, அருட்தந்தை டிரான் பெரேரா அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினரின் உதவிக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.