புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.டி.யூ. கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 23ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

1997 ஜனவரி 9 அன்று விடுதலைப் புலிகள் நடத்திய பரந்தன் தாக்குதலின்போது அந்த சிரேஷ்ட அதிகாரி காயமடைந்தார். அந் நடவடிக்கையின் போது, அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, அவரது உடலின் கீழ்ப்பகுதி செயலிழந்தது.

நாட்டிற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க மற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டி, அவருக்கு மேஜர் ஜெனரலாக அதிகாரப்பூர்வமாகப் நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.