13th March 2026
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடத்தின் முகாமைத்துவ மற்றும் நிதித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழங்கல் தினம் 2026 ஐ முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட வழங்கல் தலைமையுடன் ஒரு நேர்காணல் லொஜிஸ்டிக் டைம் இதழில் வெளியிடுவதற்காக 2026 மார்ச் 12 ஆம் திகதி உபகரண பணிப்பாளர் நாயக அலுவலக கலந்துந்துரையாடல் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இந்த நேர்காணலுக்கு, இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் தலைமை தாங்கினார்.
இராணுவ தலைமையக முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளரும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி, இராணுவ வழங்கல் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், கேணல் உபகரணம், 61 வது காலாட் படைப்பிரிவின் கேணல் உபகரண நிர்வாகம், இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் பணிநிலை அதிகாரி 1 உள்ளிட்ட பல சிரேஷ்ட வழங்கல் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது, "நெகிழ்திறன் நுண்ணறிவு: செயற்கை நுண்ணறிவு-இயக்கப்பட்ட நிலையான விநியோகச் சங்கிலி" என்ற கருப்பொருளில் மாணவ அதிகாரிகளுடன் தொழிற்துறை நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இராணுவத்தில் இணையும் பொதுமக்கள் கட்டமைக்கப்பட்ட பயிற்சி, நடைமுறை அனுபவம் மற்றும் தொழிநுட்ப ரீதியாக ஒருங்கிணைந்த வழங்கல் அமைப்புகள் மூலம் திறமையான வழங்கல் வல்லுநர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதை உபகரண பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத்தின் வழங்கல் பிரிவுகளுக்குள் வழங்கல் அமைப்புகளில் மீள்தன்மையை உருவாக்குவது குறித்தும், இராணுவ வழங்கல்களில் நிலைத்தன்மைக்கான பொறியியல், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு, மருத்துவ வசதிகள், உணவு, போக்குவரத்து மற்றும் ஆயுத சேவைகள் தொடர்பான விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பயன்பாடு மற்றும் நவீன விநியோக வலையமைப்புகளைப் பாதிக்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்தும் இந்த உரையாடல் கவனம் செலுத்தியது.