8th April 2026
பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 18 வது படைத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமைபொறுப்பேற்ற படைத்தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர் வளையம் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து, படையணியின் மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது.
பின்னர், படையணி அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டு, அவ்விழாவைக் குறிக்கும் வகையில் ஒரு மரக்கன்றை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.