பொறியியல் சேவைகள் படையணியினால் படைத்தளபதிக்கு பிரியாவிடை

பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக்க பீஎஸ்சீ பீடீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 அன்று படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதி பதவியிலிருந்து தனது கடமைகளைத் துறந்தார்.

வருகை தந்த பதவி விலகும் படைத்தளபதிக்கு சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து, போர் வீரர்கள் நினைவுதூபியில் மலர் அஞ்சலு செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு, பொறியியல் சேவைகள் படையணி அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொள்ள அவர் அழைக்கப்பட்டார்.

பின்னர், அவர் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் தனது எண்ணங்களை விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பதிவு செய்தார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.