2026-04-13

இராணுவ புலனாய் தகவலின் அடிப்படையில் 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா தோட்டம் சுற்றி வளைப்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

உடவளவ வனப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் கண்டறியப்பட்டது.

இச்சுற்றிவளைப்பின் போது, 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான, அண்னளவாக மூன்று அடி உயரம் கொண்ட 1,55,000 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.