இராணுவ வீரரின் நேர்மையான சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தில் பணியாற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.கே.பீ.கே. ரத்நாயக்க புறக்கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில், 80,000 ரூபாய் மற்றும் பல பெறுமதிமிக்க ஆவணங்கள் அடங்கிய தொலைத்த பணப்பையை, அதன் உரிமையாளரான மியன்மார் பௌத்த பிக்குவிடம் 2026 ஏப்ரல் 07 அன்று கொடகம புராண விகாரையில் கையளித்தார்.

அந்தப் பணப்பையின் உரிமையாளரான மியன்மார் நாட்டைச் சேர்ந்த வண. நியானோ தேரர் அவர்கள் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அதைத் தவறவிட்டிருந்தார். அந்தப் பணப்பையைக் கண்டெடுத்த இராணுவ வீரர் உடனடியாக கொடகம புராண விகாரையின் விகாராதிபதி வண. கொட்டிகல நந்தரத்ன நாயக்க தேரருக்கு தகவல் தெரிவித்தார். தேரரின் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, வண. நியானோ தேரர் அவர்களை தொடர்பு கொண்டு அவரது பணப்பையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த மியான்மர் தேரரும் விகாராதிபதியும் அந்த வீரரின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பெரிதும் பாராட்டினர்.