இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் இளம் அதிகாரிகள் பாடநெறி 13 நிறைவு
17th November 2024
இயந்திரவியல் காலாட் படையணியின் ஏழு இளம் அதிகாரிகள் 18 மே 2024 முதல் 12 நவம்பர் 2024 வரை பெரியகாடு இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது இளம் அதிகாரிகள் பாடநெறி 13 யினை நிறைவு செய்து இயந்திரவியல் காலாட் படையணியில் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி நிலைய பதில் தளபதி அவர்களின் அழைப்பின் பேரில் இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக இயந்திரவியல் காலாட் படையணி தலைமையக நிலைய தளபதி, இயந்திரவியல் காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரிகளுடன் கலந்து சிறப்பித்தார்.
"இலங்கையில் இயந்திரவியல் காலாட் படையின் பரிணாமம் மற்றும் எதிர்கால சவால்களில் இயந்திரவியல்மயமாக்கப்பட்ட தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் இளம் அதிகாரிகளின் இறுதி விளக்கக்காட்சியுடன் அன்றைய நடவடிக்கைகள் ஆரம்பமாகி, பயனுள்ள சிந்தனையைத் தூண்டும் அமர்வுடன் நிறைவுற்றது.
விரிவான விளக்கக்காட்சியின் பின்னர், சான்றிதழ்கள் வழங்கும் விழாவும், படையணி சின்னம் வழங்கும் விழாவும் நடைபெற்றதுடன், 4 வது இயந்திரவியல் காலாட் படையணியின் லெப்டினன் எச்.ஆர்.பீ.எம்.ஹந்தகம, பாடநெறியில் சிறந்த மாணவர் விருதினை பெற்றுக்கொண்டார்.