இலங்கை சிங்கப் படையணியினால் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி
24th December 2024
இலங்கை சிங்க படையணி 19 டிசம்பர் 2024 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் யாழ். இந்துக் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மற்றும் புனானை ரிதிதென்ன இக்ராஹ் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி திட்டத்தை நடாத்தியது. இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இத்திட்டமானது 68 மாணவர்களுக்கும் 05 ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருந்ததுடன், ஊடாடும் அமர்வுகள் மற்றும் குழுவை உருவாக்கும் பயிற்சி போன்ற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.