நலன்புரி

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 3 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் இரண்டு அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு 2025 பெப்ரவரி 3 அன்று கையளிக்கப்பட்டன.


22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.