அபிஷா மருத்துவமனை (தனியார்) நிறுவனத்தினால் வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினருக்கான மருத்துவ முகாம்

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் பார்வை குறைபாடுள்ள படையினருக்கு உதவும் நோக்கில், இராணுவ சுவசஹன நிதியத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், அபிஷா மருத்துவமனை (தனியார்) நிறுவனம் 2025 ஜூலை 16 அன்று தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இலவச மருத்துவ கொள்கை முறையுடன் மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த நிகழ்வின் போது பார்வைக் குறைபாடுள்ள பணியாளர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 50 மூக்குகண்ணாடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அபிஷா மருத்துவமனையைச் சேர்ந்த 06 கண் மருத்துவர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்றதுடன் மேலும் 150 வீரர்கள் தங்கள் பார்வைத் திறனை வலுப்படுத்த மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.