விசேட படையணியினால் போர்வீரருக்கு புதிய வீடு

விசேட படையணி படையினர் 2025 ஜூலை 18 ம் திகதியன்று அலதெனியவில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து கையளித்தனர்.

மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் திரு. நாலக்க விஜயவர்தன, அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து, இந்தத் திட்டத்திற்காக ரூ. 1.4 மில்லியன் நிதி நன்கொடை வழங்கினார்.

இந்த திட்டத்திற்கு மேஜர் ஜெனரல் (ஓய்வு) விபுல இஹலகே அவர்கள் ஒருங்கிணைப்பு வழங்கினார். அதே நேரத்தில் விசேட படையணி இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான பணியாளர் உதவியை வழங்கியது.