8th January 2026
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான பிலியட் மற்றும் ஸ்நூக்கர் 2025 இன் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2025 டிசம்பர் 30 ஆம் திகதி பொறியியல் சேவைகள் படையணி பிலியட் வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய மாணவ சிப்பாய் படையணி பணிப்பாளரும் பிலியட் மற்றும் ஸ்நூக்கர் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏ.பீ.சீ.ஆர். பிரேமதிலக்க ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நடைபெற்ற இப்போட்டியில், பொறியியல் சேவைகள் படையணியின் 'ஏ' அணி சாம்பியனானதுடன், இலங்கை சமிக்ஞைப் படையணியின் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பொறியியல் சேவைகள் படையணியின் 'பி' அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.