தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 இல் இலங்கை இராணுவம் வெற்றி

தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 அனுராதபுர சல்காது மைதானத்தில் 2026 ஜனவரி 25 அன்று நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப்பை இலங்கை கயிறு இழுத்தல் சம்மேளனம் நடத்தியதுடன் இதில் 28 கயிறு இழுத்தல் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் இலங்கை இராணுவம் ஒட்டுமொத்த சாம்பியன்களாக உருவெடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றது.

இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவம் இந்த நிகழ்வில் பங்கேற்றது.