5th February 2026
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜனவரி 26 முதல் 30 வரை ஹொரணை மாநகரசபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகுபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ அணி, நாடளாவிய ரீதியில் முன்னணி குத்துச்சண்டை அணிகளை எதிர்த்து போட்டியிட்டு, ஒட்டுமொத்த சாம்பியன்களாக உருவெடுத்தது.
இராணுவம் ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை அணிக்கான பட்டத்தை வென்றது, முத்தையா சேவியர் ரோஸ் நினைவு கிண்ணத்தையும், போட்டியின் சாம்பியனுக்கான சார்ஜன் செல்வதுரை நினைவு கிண்ணத்தையும் வென்றது. மேலும், இராணுவ சிவப்பு அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இராணுவ ஆண்கள் அணிகள் 8 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சிறப்பான பதக்கப் பட்டியலைப் பதிவு செய்தன. இராணுவ மகளிர் குத்துச்சண்டை அணி 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் சாம்பியன் கிண்ணத்தை வென்றது. விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.ஏ.ஆர். பிரசன்ன அவர்கள் 2025 ஆம் ஆண்டு தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் சிறந்த குத்துச்சண்டை வீரராக தெரிவு செய்யப்பட்டார்.