4th December 2025
6 வது சர்வதேச ஆண்கள் பஜ்ர் கிண்ண பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 நவம்பர் 26 முதல் 30 வரை ஈரான் தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவத்தின் உயரடுக்கு பளுதூக்குபவர்கள் குழு, தேசிய பளுதூக்குதல் அணியின் உறுப்பினர்களாகப் போட்டியிட்டு, சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினர்.
சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இராணுவ விளையாட்டு வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாடு திரும்பினர், அங்கு அவர்களுக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது.
15 வது இலங்கை பீரங்கிப் படையணியின் கன்னர் லியனகெதர எல்.ஜி.ஏ.எஸ் அவர்கள் சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி, 60 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இலங்கை இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.