இராணுவ சிறப்பம்சம்
58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 58 வது காலாட் படைப்பிரிவின் 22 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.என்.டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத்தளபதியாக 2025 ஜூன் 26, அன்று கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் வெளியேறும் படைத்தளபதிக்கு பிரியாவிடை
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வெளியேறும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களுக்கு 2025 ஜூன் 28, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 22 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்கள் காலமானர்
பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்கள் 2025 ஜூன் 28 அன்று சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலனமானர். அவர் இறக்கும் போது வயது 88.
மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை
மறைந்த மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூன் 30, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.
புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
Differenமாற்றுத்திறனாளி போர் வீரர்கள் 59 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்tly Abled War Heroes Visit 59 Infantry Division Area
மாற்றுத்திறனாளி போர் வீரர் குழுவினர் 2025 ஜூன் 28 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு பிரதேசதிற்கு விஜயத்தை மேற்கொண்டனர். அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும் அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிமித்தம் இந்த சிறப்பு பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய உபகரண பணிப்பாளர் நாயகம் கடமை பெறுப்பேற்பு
இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.