இராணுவ சிறப்பம்சம்
இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தினால் 2025 ஜூன் 10 ம் திகதி ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரை வளாகத்தில் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்ஏடி அரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம் வழங்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படையினரால் பொசன் தின கொண்டாட்டம்
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2025 ஜூன் 11 ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு முன்பாக, சமஹன் பாணம் வழங்கினர்.
12 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
12 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ்.என் ஹேமரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 2025 ஜூன் 04 அன்று 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி கடமையேற்பு
பிரிகேடியர் சி.பீ விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025 மே 28 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
சாரநாத் கல்லூரியில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதிக்கு பாராட்டு விழா
இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதியும், பாடசாலையின் புகழ்பெற்ற பழைய மாணவருமான மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து ஆற்றிய சேவையைப் பாராட்டி, குளியாப்பிட்டி சாரநாத் கல்லூரி, 2025 மே 15 அன்று சிறப்புப் பாராட்டு விழாவை நடத்தியது.
‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி மன்னாரில் வெற்றிகரமாக நிறைவு
‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி ஜூன் 04, 2025 அன்று மன்னார் நகர சபை உள்ளக மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முதற்கட்ட போட்டிகள் 2025 மே 20 அன்று நடைபெற்றன.
உலக சுற்றாடல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள இராணுவ நிறுவனங்களில் மரக்கன்றுகள் நாட்டல்
'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற தொனிப்பொருளுடன் 2025 ஜூன் 05, அன்று உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு இணையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ நிறுவனங்களில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு பங்களிப்பு வழங்கினர்.
பிலியந்தலை மரக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க படையினர் உதவி
பிலியந்தலை போகுந்தர சந்திக்கு அருகிலுள்ள தேவ்மினி மரக்கடையில் 2025 ஜூன் 04, அன்று தீ விபத்து ஏற்பட்டது. கிடைத்த தகவலுக்கமைய 5 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் தீயணைப்பிற்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர்.
உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
இராணுவத் தலைமையக உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் ஆர்எம் பாலசூரிய யூஎஸ்பீ அவர்கள் 2025 ஜூன் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
ஓய்வு பெறும் மேஜர் ஜெனரலுக்கு இலங்கை பொறியியல் படையணியினால் பிரியாவிடை
இலங்கை பொறியியல் படையணி, மேஜர் ஜெனரல் டி.சி. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் நிறைவு குறிக்கும் வகையில் 2025 மே 29 ஆம் திகதி பிரியாவிடை அளித்தது.